ஏப்ரல் 10ஆம் தேதி அம்மாவின் பிறந்தநாள்! அந்தமானில் இருப்பாள்!
ஏற்கனவே ரசனைக்காரர் அம்மாவைப் பற்றி அழகான பதிவிட்டிருந்தாலும் இது ஏழைக்கேற்ற எள்ளுருண்டை போல! சகித்துக்கொள்ளவும்!
உலகின் மற்ற எல்லா அம்மாக்கள் போலவே பெரிதாக எந்த எதிர்பார்ப்பும் வைத்துக்கொள்ளாதவள். அம்மாவை மகிழ்விக்க ப்ரியா சிஸ்டர்சின் பெருமாள் உன் திருநாமமோ, நித்யஶ்ரீயின் சதா சந்தோஷம் தந்திடும் திருப்பதியோடவுன்லோடு செய்தால் போதும்! அதிலேயே பேருவகை கொண்டுவிடுவாள்.
பெரும்பாலும் கோபமே வராது!
மும்பையில் பணிபரிகையில் வீடு வந்தால் ஆறில் நான்கு நாட்கள் வெளியில் சுற்றிவிட்டு இரவுச் சாப்பாட்டுக்கு மட்டும் வீடு புகுவேன்; தங்கைதான் கடிந்துகொள்வாள், "வீட்டுல சாப்பிட உனக்கென்னடா கேடு, அவ உனக்காக சமையல் பண்ணி வெச்சுட்டு சாப்பிடாம இருக்காடா" என்பாள். ஆனாலும் அம்மா, "நீ சந்தோஷமா இருந்தாலே போதுன்டா" என்பாள். மீண்டும் மும்பை கிளம்புகையில் கண்ணீருடன் நிற்கும் அம்மாவைப் பார்க்கும் தைரியமே இராது!
பெரும்பாலும் கோபமே வராது!
மும்பையில் பணிபரிகையில் வீடு வந்தால் ஆறில் நான்கு நாட்கள் வெளியில் சுற்றிவிட்டு இரவுச் சாப்பாட்டுக்கு மட்டும் வீடு புகுவேன்; தங்கைதான் கடிந்துகொள்வாள், "வீட்டுல சாப்பிட உனக்கென்னடா கேடு, அவ உனக்காக சமையல் பண்ணி வெச்சுட்டு சாப்பிடாம இருக்காடா" என்பாள். ஆனாலும் அம்மா, "நீ சந்தோஷமா இருந்தாலே போதுன்டா" என்பாள். மீண்டும் மும்பை கிளம்புகையில் கண்ணீருடன் நிற்கும் அம்மாவைப் பார்க்கும் தைரியமே இராது!
ஏழு, எட்டு வகுப்புகளில் கணக்கு வீட்டுப்பாடம் கைவராது போனால் வரும் ஆற்றாமையால் பேனாவைத் தூக்கியெறிந்து ஆர்ப்பாட்டம் செய்வேன். அம்மா என்னை அமைதிப்படுத்தி, "எனக்கு நீ சொல்லித்தா; உனக்கு நான் சொல்லித்தரேன்" என்பாள். பி.யு.சி அவளைக் கைவிடவில்லை. பத்து நிமிடங்களில் கணித சூட்சுமத்தை அழகாக சொல்லித்தருவாள். ஆனந்தத்தின் எல்லைக்கே போய்விடுவேன். உடன்பிறந்த நால்வரின் கல்விக்காகத் தன் படிப்பைத் தியாகம் செய்த அம்மாவை மேல் படிக்க வைக்காத பாட்டியின் மீது சமயங்களில் கடுங்கோபம் வரும்.
என் பள்ளிப்பருவத்தில் அம்மா வேலைக்குச் செல்ல நேர்ந்தது. மாதம் கிடைத்த சொற்ப வருமானத்தில் எங்கள் இருவரின் கல்விச்செலவையும் தாண்டி அவள் குடும்பம் நடத்திய பாங்கில் எட்டூருக்குக் கோயில் கும்பாபிஷேகம் செய்யலாம்.
எவர் கையையும் எதிர்பார்க்காது தங்கையின் திருமணத்தைத் திறம்பட நடத்தியபோது, தேவதையாகவே தோன்றினாள்!
கூடவே இருந்து கஷ்டங்களை அனுபவித்ததால், நான் அருகில் இல்லாது போகும் துக்கத்தைத் தர, அவளை விட்டுவிட்டு வேறேதும் ஊருக்குச் செல்ல, மனமில்லாமல் போகிறது. அதனாலேயே அம்பத்தூர் தாண்டினால் Homesick போல Mom sick வந்துவிடுகிறது!
பணியின் தன்மையினால் அவளை எங்கும் அழைத்துச் செல்ல இயலாதது என் துரதிர்ஷ்டம். யாரேனும் தீர்த்தயாத்திரை சென்றால் அவளோடு இணக்கமாக இருப்பவர் யாராகிலும் இருந்தால் போய்வா என்று சொல்லிவிடுவேன். காசி, கயா எல்லாம் போய்வந்து, "ரொம்ப தாங்க்ஸ்பா" என்றாள். நெகிழ்ந்துவிட்டேன்.
அம்மாவை விமானத்தில் அழைத்துச்செல்ல ஆசைப்பட்டேன். இப்போது மாமாவின் அழைப்பின் பேரில் இரண்டு சித்திகளோடு அந்தமான் போகிறாள். எப்படியோ சாத்தியமாகப்போகிறது!
ஆனால் இன்றளவும் அப்பாவுக்குப் பயந்து, சம்பாதிக்க ஆரம்பித்தபின் எனக்கும் பயப்பட ஆரம்பித்துவிட்டாள், அம்மா. இதை என் தோல்வியாகவே கருதுவேன்.
தங்கையின் திருமணத்தில் தன் கை ஓங்கியிராத காரணத்தால் என் திருமணத்தைத் தன் முனைப்பில் நடத்திய அப்பா, தற்போதைய என் மனைவியிடம் அப்போது சொன்னது, " அவன் சரியான அம்மா கோண்டு; அவள் என்ன சொன்னாலும் தலையாட்டுவான்". இருந்துவிட்டுப் போகிறேன். என்ன இப்போ?
புகைப்படத்தில் உள்ளது என் அம்மாவும் என் மகளும்:-)

This comment has been removed by the author.
ReplyDeleteமகளும் மற்றும் ஒரு அம்மாவே
ReplyDelete