தீபாவளியன்று பெய்த மழை பழைய நினைவுகளைக் கிளறிவிட்டது!
அப்போது நான் ப்ளஸ் ஒன் படித்துக்கொண்டிருந்தேன். பள்ளியில் சீருடை வெள்ளைச் சட்டையும் சாம்பல் நிற பேண்டும்! அதை அணிந்து கோமாளியாகவே வழக்கமாகச் சென்றுகொண்டிருந்த நான், தீபாவளிக்கு வாங்கிய பேன்ட் ஷர்ட்டில் உண்மையிலேயே அழகாக இருந்தேன் அல்லது இருப்பதாக நினைத்துக்கொண்டேன்.
நிற்க. இந்த இடுகை என் உடையைப் பற்றியதல்ல!
அந்தப் பதினாறு வயது, எல்லோரின் வாழ்விலும் ஒருமுறையேனும் வீசும் தென்றல் என் வாழ்விலும் தோன்றிய காலம் அது! நாங்கள் ட்யுஷன் பயின்ற ஆசிரியரிடம் அந்தப் பகுதியைச் சேர்ந்த சில மாணவிகளும் பயின்றனர்! முழுக்க முழுக்க ஆண்கள் பள்ளியில் பயின்ற எங்களைப் போன்ற மாணவர்களுக்கு அது ஒரு இனிய நேரமாக அமைந்தது!
எப்போதும் போல மாணவிகளில் ஒருத்தி கோவில் தீபமாக எங்கள் கண்களுக்குக் காட்சி தர ஒவ்வொருவரும் அவளைக் காதலிக்க ஆரம்பித்தோம். இதனிடையே சிறந்த திறன் எதுவுமின்றி பெரிய படிப்புமின்றி இருந்த என்னைச் சுற்றி இருந்த நண்பர்கள் இரண்டு பேர் என்னையும் அவளையும் இணைத்து பேச ஆரம்பிக்க நண்பர்களுக்குள் சண்டை மூளக் காரணமாயிருந்தாள்.
குடும்பத்தில் அப்போது இருந்த இறுக்கமான சூழ்நிலையில் அந்தத் தருணங்கள் என்னுள் ஒரு மயக்கத்தை ஏற்படுத்த நானும் அந்தப் பெண்ணை விரும்ப ஆரம்பித்திருந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக என்னுள் வியாபித்து பாடங்களை மறக்க வைத்து அவளே அறியாமல் ஒரு தோள்வியாளனைத் தயார்படுத்திக் கொண்டிருந்தாள் அந்தப் பெண்.
தீபாவளியை அடுத்து வந்த ஒரு நாள் மாலையில், நண்பர்கள் யாரும் வர மறுத்துவிட்ட ட்யூஷனுக்கு நான் மட்டும் கிளம்ப, ஏற்கனவே கருமேகங்கள் சூழ்ந்திருந்த வானம் அப்போது தூற ஆரம்பித்திருந்தது. அந்தப் பெண் எனது உடையைப் பார்த்தவுடன் என்னைக் காதலிக்க ஆரம்பித்துவிடுவாள் என்ற நம்பிக்கையில் மழை பெய்தாலும் பரவாயில்லை என்று நனைந்துகொண்டே சாரின் வீட்டுக்குச் செல்ல, வீட்டு வாசலில் ஒரு சைக்கிள் கூடத் தென்படவில்லை. கனத்த மனதுடன் போர்டிகோவில் நின்றபடி சார் என்றழைத்தேன். சாரின் மகள் வந்து " என்ன அண்ணா, இப்படி நனைஞ்சு வந்திருக்கீங்க? இன்னிக்கு ட்யுஷன் இல்லையே, உங்களுக்குத் தெரியாதா?" என்று கேட்க உள்ளே கட்டியிருந்த கோட்டை இடிய ஆரம்பித்தது!
அதன் பிறகு மற்ற பாடங்களுக்காக அவள் மேற்கொண்ட சிறப்பு வகுப்புகள் இந்த ட்யூஷனுக்கு வர இடையூறாக இருப்பதால் அவள் மற்றும் அவளது தோழிகள் அனைவரும் நின்றுவிட்டனர். அதன் பின்னர் அவளை நான் வாழவல் சந்திக்கவேயில்லை. மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைய, வெகு காலம் கழித்தே அவள் பள்ளிப்படிப்புக்குப் பிறகு தந்தையின் வேலை மாற்றம் காரணமாக ஊரை விட்டே சென்றுவிட்டது தெரிய வந்தது!
கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் ஆயிற்று அவள் நினைவுகள் காதலில் இருந்து ஒரு கனவாக மறைய! இருந்தாலும் அந்த மழை நேரத்து மாலை மறக்க முடியாத ஒரு அழகான நினைவு!

No comments:
Post a Comment